Naatu Naatu: ஆஸ்கரை நெருங்கிய நாட்டு நாட்டு: கடவுளே கடவுளேனு இருக்கும் ரசிகர்கள்

Junior NTR, Ram Charan: நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் ரேஸில் இருக்கும் நிலையில் இந்திய ரசிகர்கள் எல்லாம் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.ஆர்.ஆர்.எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. அனைத்து மொழி ரசிகர்களையும் அந்த படம் கவர்ந்துவிட்டது. மேலும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை டான்ஸ் ஆடினார்கள். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். போட்ட ஸ்டெப் மிகவும் பிரபலமாகிவிட்டது.
ஆஸ்கர்ஆஸ்கர் விருதுகளுக்காக பல்வேறு பிரிவுகளில் ஆர்.ஆர்.ஆர். படம் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல் நேற்று மாலை வெளியானது. அதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு இடம் பிடித்துள்ளது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு இடம் கிடைக்கவில்லை.
பரிந்துரைஒரு ஆஸ்கர் கிடைத்துவிடாதா என இந்தியர்கள் ஏங்கும் நிலையில் இந்த ஆண்டு மூன்று பரிந்துரைகள் கிடைத்துள்ளது. நாட்டு நாட்டு தவிர்த்து, Best Documentary Feature Film பிரிவில் ஷௌனக் சென்னின் All That Breathesம், Best Documentary Short category பிரிவில் கார்திகி கொன்சால்வஸின் The Elephant Whisperersம் இடம்பிடித்துள்ளது.
ராஜமவுலிஆஸ்கர் பரிந்துரை பட்டியலை பார்த்தவர்கள் ஆர்.ஆர். ஆர். படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ராஜமவுலி சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியான பதிவை போட்டுள்ளார். என் படத்தில் வரும் ஒரு பாடலுக்காக என் பெத்தண்ணாவுக்கு ஆஸ்கர் நாமினேஷன் கிடைத்துள்ளது. இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும். தாரக், சரணை விட நான் மிகவும் வேகமாக நாட்டு நாட்டுனு ஆடிக் கொண்டிருக்கிறேன். கனவிலும் ஆஸ்கர் பற்றி நினைத்தது இல்லை. நாட்டு நாட்டு மற்றும் ஆர்.ஆர்.ஆர். ரசிகர்கள் தான் அதில் நம்பிக்கை வைத்தார்கள் என்கிறார்.
மகிழ்ச்சி
நாட்டு நாட்டுஆஸ்கர் பரிந்துரை பற்றி ரசிகர்கள் கூறியிருப்பதாவது, கோல்டன் குளோபை அடுத்து நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் கிடைக்கும் என்று நம்புகிறோம். கிடைத்தால் ரொம்ப சந்தோஷம். அதே சமயம் ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது இல்லை. உயரிய விருதுகளில் அதுவும் ஒன்று, அவ்வளவு தான். அதனால் ஆஸ்கர் விருது கிடைக்காமல் போனால் நாட்டு நாட்டு சுமாரான பாடல் என்று அர்த்தம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.