
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக திமுக சட்டத்துறை சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக சட்டத் துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணியாற்றும் கழக நிர்வாகிகளுக்கும் – கழகத் தோழர்களுக்கும் உதவிடும் வகையில், திமுக சட்டத் துறை சார்பில், சட்டத் துறை இணைச் செயலாளர்கள் இ.பரந்தராமன், எம்.எல்.ஏ., (99406-66269) மற்றும் ஈரோடு சு.இராதாகிருஷ்ணன் (98427-55335) மற்றும் வழக்கறிஞர் அர்ஜூன் (95009-92005) ஆகியோர் தலைமையில், கழக வழக்கறிஞர்கள் அடங்கிய வார் ரூம் (War Room) அமைக்கப்படுகிறது. தேர்தல் பணியாற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தேர்தல் குறித்த சட்டப் பிரச்சினைகள் தொடர்பாக உடனுக்குடன் இவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.