ரூ.3.93 கோடியை தாண்டிய பழனி கோயில் காணிக்கை வரவு!

பழனி முருகன் கோவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையில் எண்ணப்பட்டதில் 3கோடியே 93 லட்சத்து 37 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமாக கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் மலைக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் எண்ணிக்கைகள் நேற்றும், இன்றும்  நடைபெற்றது. இதில் 3  கோடியே 93 லட்சத்து 37 ஆயிரத்து  731 ரூபாய் ரொக்கமாகவும் , தங்கம் 694 கிராமும், வெள்ளி 17,539 கிராமும் , வெளிநாட்டு கரன்சி 692 நோட்டுகளும் கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ ,மாணவிகள் கோவில் அதிகாரிகள் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். உண்டியல் எணணும் பணியினை சிசிடிவி கேமரா மூலம் அறங்காவலர் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கும்பாபிசேகம் முடிந்த நிலையில் பக்தர்கள் உண்டியிலில் செலுத்திய காணிக்கைகள் 4 கோடியை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உண்டியல் எண்ணிக்கை முழுவதும் பல்வேறு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கையின் போது பள்ளி, கல்லூரி மாணவிகள், வங்கி அதிகாரிகள், கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில், பழனி மலைக்கோயில் உண்டியல்  நிறைந்ததால் இரு நாட்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரூ.3.80 கோடியை தாண்டியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் ஆங்கில புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக வந்திருந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக 20 நாட்களில் நிறைந்தது.  

இதையடுத்து பழனி உண்டியல்கள் இரண்டு நாட்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.  எண்ணிக்கையின் மொத்த தொகையாக ரொக்கம் மூன்று  கோடியே 80 இலட்சத்து 45 ஆயிரத்து 807 ரூபாய் கிடைத்துள்ளது.  

பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி, மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 855 கிராமும், வெள்ளி 10,631  கிராமும் ,வெளிநாட்டு கரன்சி 574  நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளது. தவிர உண்டியலில் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்தன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.