LEO: அதே டெய்லர்.. அதே வாடகை: விஜய்யின் 'லியோ' டைட்டிலை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்.!

விஜய், லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் ‘லியோ’ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. யாரும் யூகிக்காத டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘லியோ’ டைட்டில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியும் வருகின்றனர்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் மீண்டும் கூட்டணி இணைந்துள்ளனர். கோலிவுட் சினிமா அதிகம் எதிர்பார்க்கும் படமாக ‘தளபதி 67’ உருவாகி வருகிறது. இந்தப்படம் லோகேஷ் கனகராஜின் LCU எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக ‘தளபதி 67’ படம் குறித்த அப்டேட்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் நேற்றைய தினம் டைட்டில் வெளியாகி இணையத்தை டிரெண்டாகி வருகிறது. ‘K’ எழுத்தில் துவங்கும் ஏழு எழுத்து டைட்டில் என்றும் பல வதந்திகள் கூறப்பட்ட நிலையில், யாரும் யூகிக்காத ‘லியோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Samantha: மோசமான நாட்கள்.. மறக்கவே கூடாது: சமந்தாவின் திடீர் பதிவால் பதறிப்போன ரசிகர்கள்.!

மேலும் டைட்டில் அறிவிப்பிற்காக வெளியிடப்பட்டுள்ள 2.49 நிமிடம் ஓடும் புரோமோ வீடியோவில் சைலண்டாக ஆரம்பித்து விஜய் பார்வையாலே மிரட்டியுள்ளார். மேலும், இறுதியில் ‘பிளடி ஸ்வீட்’ என்று விஜய் பேசும் வசனமும் தெறியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதனிடையில் இந்த டைட்டிலை ட்ரோல் செய்தும் பல பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லியோ காஃபி என ‘தளபதி 67’ டைட்டிலை கலாய்த்து தள்ளி வருகின்றனர் ரசிகர்கள். மேலும், ரஜினியின் ‘ஜெயிலர்’ பட புரோமோவை போன்றும் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான ‘கோஸ்ட்’ படத்தின் டைட்டில் வீடியோவை போன்றும் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதே டெய்லர்.. அதே வாடகை என அஜித் ரசிகர்கள் ‘லியோ’ வீடியோவை கிண்டலடித்து வர, விஜய் ரசிகர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வாருகின்றனர்.

Leo: இதுக்காகவே லோகேஷை பாராட்டலாம்: உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்.!

மேலும், கமலின் விக்ரம் படத்தின் டைட்டில் அறிவிப்பின் போது வெளியான ப்ரோமோவை ஒப்பிடும் போது ‘லியோ’ வீடியோ சுமாராகவே இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்தப்படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், திரிஷா, கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மற்றும் சாண்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.