திருச்சி மாவட்டத்தில் மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் உட்பட இரண்டு பேரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (40). இவர் பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரும், பூவாளூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (55) என்பவரும் சேர்ந்து 14 வயதுடைய பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இதனால் மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டதால், குடும்பத்தினர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து மாணவியுடன் விசாரித்தனர்.
அப்பொழுது ஆசிரியர் சதீஷ் மற்றும் சந்திரசேகர் தன்னிடம் நெருங்கி பழகியதை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மாணவியரின் பெற்றோர் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் சதீஷ் மற்றும் சந்திரசேகர் ஆகிய இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.