பண்ருட்டி அருகே, மது அருந்துவதற்கு முன் சைடிஷை சாப்பிட்டு காலி செய்த நண்பனை அடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பரோட்டா மாஸ்டரான சிவக்கொழுந்து கடந்த 29ம் தேதி இரவு, நண்பர்களான அபினேஷ், கார்மேகம் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார்.
அப்போது சைடிஷாக வைத்திருந்த மட்டன் வறுவலை சிவக்கொழுந்து முழுவதுமாக சாப்பிட்டுவிட்டதால் ஆத்திரமடைந்த இருவரும், சரமாரியாக தாக்கியதில் சிவக்கொழுந்து மயங்கியுள்ளார்.
அவர் இறந்துவிட்டதாக எண்ணி, உடலை சாலையில் போட்டுவிட்டு உறவினர்களை தொடர்பு கொண்டு அவர் விபத்தில் காயமடைந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவக்கொழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில் கொலை செய்தது அம்பலமானது.