பிரபல நகைச்சுவை இயக்குநர் டி.பி. கஜேந்திரன் காலமானார்

Director Gajendran Passes Away: பல்வேறு நகைச்சுவை திரைப்படங்களை இயக்கியவரும், வடிவேலு, விவேக் ஆகியோருடன் பல நகைச்சுவை காட்சிகளின் நடித்தவருமான டி.பி. கஜேந்திரன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப். 5) உயிரிழந்தார்.

இவர் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நேற்று (பிப். 4) வீடு திரும்பிய நிலையில், இன்று காலமானார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

1985ஆம் ஆண்டு வெளியான சிதம்பர ரகசியம் படத்தில் இவர் நடிகராக அறிமுகமானார். 1988இல் ‘வீடு மனைவி மக்கள்’ என்ற படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். இவர், சீனா தானா, பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நகைச்சுவை படங்களை இயக்கியவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.