58 வயது பெண் கொலை… வன்புணர்வு செய்த 16 வயது சிறுவன் – பழிவாங்க காரணம் என்ன?

மத்திய பிரதேசத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 58 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அரிவாளால் வெட்டி கொலை செய்த 16 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தின் ஹனுமானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கைலாஷ்புரி கிராமத்தில் ஜனவரி 30ஆம் தேதி இரவு இச்சம்பவம் நடந்தது. வாயில் பிளாஸ்டிக் பை, துணியை திணித்த சிறுவன், அந்த மூதாட்டி வசிக்கும் கட்டடத்தின், கட்டுமானப் பகுதிக்கு இழுத்துச் சென்று, கம்பு, அரிவாளால் அவரது தலை மற்றும் பிற உடல் பாகங்களில் தாக்கியதுடன், அந்தரங்க உறுப்புகளிலும் காயங்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுவன் மொபைல் போனை திருடியதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியதாகவும், அதற்கு பழிவாங்கவே சிறுவன் இவ்வாறு செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் கூறுகையில்,”பிப்ரவரி 1ஆம் தேதி 58 வயது பெண் ஒருவரின் சடலம் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், அவரது அக்கம்பக்கத்தில் வசிக்கும் சிறுவனை போலீசார் தேடினர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி பார்ப்பதற்காக தங்கள் வீட்டிற்கு வந்த சிறுவன் மீது பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் மொபைல் போனை திருடியதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனால், அந்த சிறுவனுக்கும் பெண்ணின் குடும்பத்துக்கும் இடையே பகை ஏற்பட்டது. திருட்டுப்பழியை தொடர்ந்து கிராமத்தில் அவர் சந்தித்த அவமானத்தின் காரணமாக, அந்த சிறுவன் பழிவாங்க நினைத்துள்ளார். 

ஜனவரி 30 அன்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனும் கணவரும் இல்லாத நேரம் பார்த்து, சிறுவன் அவரது வீட்டிற்குள் நுழைந்தான். கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை அவர் தாக்கியதாகவும், அவர் கத்த முயன்றபோது, பாலிதீன் பை, துணியை வாயில் திணித்துள்ளான்.

பின்னர் அவர் ஒரு கயிறு மற்றும் கம்பியைப் பயன்படுத்தி ஒரு பிளாஸ்டிக் பையை பெண்ணின் முகத்தில் கட்டி, கட்டடத்தின் கட்டுமானப் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளான். பெண்ணை ஒரு கதவில் கட்டிவிட்டு, சிறுவன் அந்தப் பெண்ணை பலமுறை அடித்ததாகவும், மூச்சுத் திணறலுக்குப் பிறகு அவள் அசையாமல் இருந்தபோது அவளை பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

மேலும் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலை, கைகள், தொண்டை மற்றும் மார்பு பகுதிகளில் அரிவாளால் தாக்கியதுடன், குச்சியால் அவரது அந்தரங்க பகுதிகளில் காயம் ஏற்படுத்தியுள்ளான். பின்னர் அந்த பெண்ணின் வீட்டில் வைத்திருந்த ரூ.1,000 ரொக்கம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு சிறுவன் தப்பியோடிவிட்டான். பிடிப்பட்ட பின்னர், சிறுவன் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்” என்று கூறினார். 

தற்போது அந்த சிறுவன், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளான் என்றும், அவன் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | அச்சமூட்டூம் குழந்தை திருமணம்… 1800க்கும் அதிகமானோர் கைது
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.