"அம்பேத்கர் பேனாவுக்கே நாட்டில் சிலை கிடையாதே!" – பேனா சிலை விவகாரத்தில் சீமான் காட்டம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாள்ர் சீமானின் சகோதரி மகளின் திருமணம், நாகர்கோவிலில் நடந்தது. திருமண விழாவில் கலந்துகொண்ட சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள்தான் வெல்வோம். நாங்கள்தான் வெல்ல வேண்டும். மக்கள் மாற்றத்தை எண்ணிவிட்டால், அதை மக்களே செய்வார்கள். `காசு ஒரு சுற்று நாங்கள் கொடுத்துவிட்டோம்’ என எங்களிடமே ஆளுங்கட்சியினர் சொல்கிறார்கள். `கடைசி மூன்று நாள்கள், நாங்கள் பார்த்துக்கொள்வோம்’ என்கிறார்கள். ஆளுங்கட்சி என்பதால் எளிதாகப் பணம் பட்டுவாடா செய்கிறார்கள். எங்களுக்கு அந்த அவசியம் இல்லை. காங்கிரஸுடன் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என கமல் நினைக்கிறார். அது அவருடைய கொள்கை முடிவு. ஆனால் நான் தனியாகத்தான் நிற்பேன் என கொள்கைமுடிவு எடுத்திருக்கிறேன்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

கடலுக்குள் அரை ஏக்கர் நிலத்தில் பேனா சிலை வைக்கப்போகிறார்கள். ஏற்கெனவே கருணாநிதிக்கு சிலை வைத்திருக்கிறார்கள். அது அவரது எழுத்தையும், பேனாவையும் நினைவூட்டாதா… இல்லையென்றால் ஏன் சிலையை வைத்திருக்கிறீர்கள். அதுபோல மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் வைத்திருக்கிறார்கள், அது அவரை நினைவூட்டாதா… எதற்கு கடலுக்குள் 137 அடியில் சிலை வைக்க வேண்டும். இது வீண் விரையம். காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகத்துக்கு 6,111 ஏக்கர் நிலத்தை விரிவாக்கத்துக்கு எடுத்துக்கொள்ளலாம் என கையொப்பமிட்டது இந்த பேனாதான். அரை ஏக்கர் கடலில் பேனா சிலை வைத்தால், அதைக் காரணம் காட்டி காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு எளிதில் அனுமதி கிடைத்துவிடும் என்பதால் அதைச் செய்கிறார்கள். கடல் நாட்டுக்கு பொதுவானது. `கடலில் தூக்கிவீசினாலும் கட்டுமரமாக மிதப்பேன்’ என்றார் கருணாநிதி. அப்படியானால் கட்டுமரம் வையுங்கள். ஏன் பேனா சிலை வைக்கிறீர்கள். மீறி வைத்தால் அதிகாரம் எங்கள் கைக்கு வரும்போது அதை உடைப்போம் என்றேன். அதிகாரம் ஒரே ஒருத்தருக்கு பட்டயம் போட்டு வைக்கவில்லை. அந்த அதிகாரம் என் கைக்கு வரும்போது நான் உடைப்பேன். அவர்கள் சிவாஜி சிலையை தூக்கினார்கள், அதற்கு முன் கண்ணகி சிலையை தூக்கினார்கள். அதுபோல நாங்களும் பேனா சிலையை தூக்குவோம். `பேனாவை உடைக்கும்போது என்கை பூ பறிக்கபோகுமா?’ என சேகர் பாபு சொன்னதெல்லாம் பழைய வசனம். பூப்பறிக்கப் போவது, புளியங்கா பறிக்கப் போவது எல்லாம் நான் பிறப்பதற்கு முன்னாடியே உள்ள டயலாக்கு.

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்துகொடுத்த அம்பேத்கர் பேனாவுக்கே சிலை இல்லையே. காந்தியும், அம்பேத்கரும் நம் நாட்டின் அடையாளங்கள். மலேசியா, சிங்கப்பூர் போனல்கூட படேல் யார் என்றே தெரியாது. ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்க உதவினார் என்பதற்காக படேலுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். அந்த சிலை வைக்கும்போதே நாங்கள் எதிர்த்தோம். நாங்கள் அதிகாரத்துக்கு வரவேமுடியாது என நீங்கள் நினைக்கக்கூடாது. முகலாய சாம்ராஜ்யம், பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் வீழ்ந்தன, எங்கள் சேர, சோழ, பண்டிய படைகள் வீழ்ந்தன. வீழ்த்த முடியாத படை என்று ஒன்று உலகில் இல்லை. இப்போது அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை தி.மு.க-வுக்கும் ஏற்படும்.

சீமான்

உலகின் ஆறாவது பெரும் கடற்கரையை எப்படி சுடுகாடாக மாற்றினீர்கள். நீங்கள் இறக்க, இறக்க அடிக்கிக்கொண்டே போனால் கடற்கரை எங்கே இருக்கும். கல்லறைகள்தானே இருக்கும். ஏற்கெனவே பல போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிறேன். பேனா சிலை வைத்தால் அதற்கு எதிராகவும் போராடுவேன். ஒரு நினைவிடத்துக்கு இவ்வளவு செலவு செய்கிறார்கள், விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லை, தகர டப்பா போட்டு பாதுகாக்க முடியாதா. அதிகபட்சமாக தார்ப்பாய் போடுகிறார்கள். மதுவை பாதுகாக்க ஏசி ரூம் வைக்கிறீர்கள். தஞ்சையில் சேதமான பயிருக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் என்பது குறைவானது. வேளாண் சங்கங்கள் முடிவெடுத்து கூறும் இழப்பீட்டை வழங்க வேண்டும்.

குடிநீரில் மனிதக் கழிவை கலந்தவர்கள்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சின்ன கிராமத்தில் யார் கலந்தது எனத் தெரியவில்லை என்கிறார்கள். எளிய மக்கள் என்றால் நீதி கிடைக்காதா. தாழ்த்தப்பட மக்களுக்கு என ஏன் தனியாக குடிநீர் தொட்டி கட்டுறீர்கள். பொது குடிநீர் தொட்டி வையுங்கள். இரட்டைக் குவளை முறை இன்னும் இருக்கிறது என்றால் நீங்கள்தான் வெக்கப்பட வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை கேரளாவில் தொடங்கி, ஒடிசா வரை போகிறது. என் மலையை வெட்டி எடுக்கும்போது ஏன் கேள்வி கேட்கவில்லை. மலையை, மணலை எப்படி உருவாக்குவீர்கள். நான் வந்தால் மலையை தொடுவீர்களா. தொட்டால் நான் உள்ளே போட்டு புதைத்துவிடுவேன். திராவிட மாடல் வேடிக்கையானது. இலங்கையில் 12 மீனவர்களை ஒரே சங்கிலியில் இழுத்துக்கொண்டுபோனர்கள். எந்த தலைவர்களாவது கண்டனம் தெரிவித்தார்களா. பா.ஜ.க-வுக்கு சாமி இருந்தால் போதும், எங்களுக்கு இந்த பூமி போதும். மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் 2 கோடி வடமாநிலத்தவர் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள். இங்குவந்து எங்கள் வேலையைப் பறிப்பார்கள், தமிழர்களை நிலமற்ற கூலிகளாக்குவார்கள். இதுதான் இலங்கையிலும் நடந்தது. தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் விசா போன்று அனுமதி எடுக்க வேண்டும். அவர், எங்கு தங்குவார், எத்தனை நாள்கள் தங்குவார் என்ற விவரங்களை வாங்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களுக்கு நாம் போகும்போது அப்படித்தானே வங்கினார்கள். அதே சமயம் தமிழர்களுக்கு அடையாள அட்டை என்பது தண்டம்.

சீமான்

`சூரியன் கிழக்கில் உதிக்கும், அதுபோல  ஈரோடு கிழக்கில் சூரியன் உதிக்கும்’ எனச் சொல்லியிருக்கிறார். சூரியன் ஈரோட்டில் நிற்கவே இல்லையே. கைதான் நிற்கிறது, அதுவும் மொட்டக்கை நிற்கிறது. இதுவரை சூரியன் நின்றது இல்லை. நேரடியாக மோத தயாரில்லாமல் அவர்களிடம் கட்டிவிட்டிருக்கிறார்கள். ஆனால், நாங்கள் தைரியமாக போட்டியிடுகிறோம். தேர்தலில் போட்டியிடுபவர்கள்தான் தேறுகிறார்கள், மக்கள் தேறவே இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 20 ஆண்கள், 20 பெண்களைக் களத்தில் நிறுத்துவோம். போட்டியிடுவோம், களத்தில் சண்டை செய்வோம். அண்ணாமலை எதையும் பேச முடியாது, தீர்மானிக்க முடியாது. மோடி அமித் ஷா போன்ற எஜமானர்கள் இருக்கும்போது இங்கு அவர்களால் என்ன செய்ய முடியும். மத்திய உளவுத்துறை, அமலாக்கத்துறை எல்லாம் தன்னாட்சி அமைப்புகள் என நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், அவை மோடியின் ஐந்து விரல்களாக இருக்கின்றன. தேவைப்பட்டால் மடக்கி நிமிர்க்கிறார். அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு யாரிடமிருந்து ஆபத்து. சீனாவிலிருந்து ஆபத்து என்கிறார். சீனாவை அவ்வளவு கேவலமாக நினைக்கக் கூடாது. உயிருக்கு பயந்தவனால் ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் நேரத்தில் ஆரத்தி எடுக்கிறீர்கள், வாக்களர்களை கட்டிபிடிக்கிறீர்கள். அதிகாரத்துக்கு வந்தபிறகு பாதுகாப்பு தேடுகிறீர்கள். அண்ணாமலை வீர மரபில் வந்தவர்தானே. காவல்துறை அதிகாரியாக இருந்திருக்கிறார், பயிற்சி எடுத்திருக்கிறார் அவர் பயப்படக்கூடாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.