LEO: சர்வதேச பிரச்சனையை கையிலெடுக்கும் லோகேஷ் கனகராஜ்..வெளியானலியோ படத்தின் கதைக்களம்..!

விஜய்
வெற்றிக்கூட்டணி மாநகரம், கைதி படங்களை இயக்கி வெற்றிகண்ட லோகேஷ் கனகராஜிற்கு மாஸ்டர் படத்தின் மூலம் விஜய்யை இயக்கும் வாய்ப்பு வந்தது. கமர்ஷியல் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்டு படங்களை இயக்கும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கின்றார் என்றவுடன் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. இதையடுத்து கடந்த 2021 ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது

வெற்றி இயக்குனர் மாஸ்டர் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த லோகேஷ் அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்க சென்றார். அனிருத்தின் இசையில் உருவான இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமலே தயாரித்திருந்தார்.முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவான இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாகவும் ,விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்தின் மூலம் லோகேஷ் இந்தியளவில் பிரபலமான இயக்குனராக உருவெடுத்தார். மேலும் இப்படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது

லியோ இதையடுத்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் பூஜை கடந்த டிசம்பர் மாதம் போடப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், கௌதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியது

கதைக்களம் இந்நிலையில் கடந்த சில மாதங்களாக லியோ படத்தின் கதைக்களம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. பல்வேறு விதமான கோணங்களில் லியோ படத்தின் கதையை கணித்தனர் ரசிகர்கள். ஆனால் தற்போது புதிதாக ஒரு கதைக்களம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது கைதி மற்றும் விக்ரம் படங்களில் போதைப்பொருளால் ஏற்படும் விளைவுகள் பற்றி பேசிய லோகேஷ் தற்போது லியோ படத்திலும் அதே போதைப்பொருளால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளாராம். ஆனால் இம்முறை சர்வதேச அளவிலான போதைப்பொருள் பிரச்சனைகள் பற்றி லியோ படத்தில் லோகேஷ் பேசியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் லியோ திரைப்படமும் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.