தண்டவாளத்தை ஆட்டையை போட்ட கும்பல்; பீகாரில் நடந்த சம்பவம்!

பீகார் மாநிலத்தில், 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரயில்வே தண்டவாளம் திருடு போன சம்பவம் அங்கு உள்ளவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு பீகாரில் ரயில் இன்ஜின் திருடு போனது. மேலும், ஜனவரி 19 ஆம் தேதி அதிகாரிகள் என கூறிக் கொண்டு வந்த மர்ம நபர்கள் செல்போன் கோபுரத்தை திருடி சென்றனர். அதோடு நிற்காமல், பழுது பார்க்க நிறுத்தப்பட்டு இருந்த ரயிலின் பாகங்கள் திருடப்பட்டது.

பீகார் மாநிலத்தில், பாண்டோல் ரயில் நிலையத்தில் இருந்து லோஹத் சர்க்கரை ஆலைக்கு செல்லும் ரயில்வே பாதை ஒன்று உள்ளது. சர்க்கரை ஆலை கடந்த இரண்டு வருடமாக செயல்படாமல் இருப்பதால், ரயில்வே பாதையும் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், 2 கிலோ மீட்ட தொலைவிற்கு ரயில்வே தண்டவாளத்தை திருடி சென்றுள்ளனர். எனினும் இந்த விவகாரம் தாமதமாக தான் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, இரண்டு ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களை ரயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளது. ரயில்வே தண்டவாளம் திருடப்பட்ட சம்பவத்தில் இரு ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்களின் உதவியுடனே தண்டவாளம் திருடப்பட்டதாகவும் உயர் அதிகாரிகள் நம்புகின்றனர்.

சாதி பாகுபாட்டை கடவுள் உருவாக்கவில்லை- ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் பேச்சு!

மேலும், தண்டவாளம் திருட்டு சம்மதமாக வழக்கு பதியப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும், இன்னும் எந்தவிதமான முன்னேற்றமும் தென்படவில்லை. தண்டவாளத்தை திருடிய நபர்கள் அதை அவர்களிடம் வைக்காமல், உடனடியாக இரும்பு கடைகளில் விற்று இருப்பார்கள் எனவும் சந்தேகிக்க படுகிறது.

பீஹாரில் இது போன்ற திருட்டு சம்பவங்கள் ஏற்கனவேபலமுறை நடந்து உள்ளது என்றாலும், 2 கிலோ மீட்டர் தொலைவில் ரயில்வே தண்டவாளம் திருடு போனது என்பது அனைவரது மத்தியிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற திருட்டு சம்பவங்கள் பீஹார் மாநிலத்தில் மேலும் வேறு ஏதாவது இடத்தில் நடைபெற்று இருக்கிறதா என்பது குறித்தும் அடுத்த கட்ட விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.