Turkey Earthquake: முன்பே உணர்த்திய பறவைகள்; 2வது நாளாக நிலநடுக்கம்!

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பிப்ரவரி 6 அன்று 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்ககத்தால் இதுவரை 45000- க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி காயங்களுடன் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 5.5 ரிக்டர் அளவு கோளில் பதிவாகியுள்ளது.

நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை பொறுத்தவரை, முதலில் 7.8 ரிக்டர் அளவு கோலிலும், இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறை 6.0 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மிகப்பெரிய கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி பலர் பலியாகிய நிலையில், பலர் கட்டிடங்களின் இடையே சிக்கி உள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதன் காரணமாக மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், இந்த நிலநடுக்கத்தால், ஈராக் மற்றும் எகிப்து ;போன்ற நாடுகளிலும் அதிர்வு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவத்திற்கு துருக்கி அரசு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகளும், காயங்களுடன் மீட்கப்படுபவர்களும் இன்னும் அதிகரிக்க கூடும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். தங்கள் வீடுகளை இழந்து இருக்க இடம் இல்லாமல், உணவு இன்றி தவித்து வருகின்றனர்.

“டீச்சர் அடிச்சால் தப்பு இல்லை”- மும்பை கோர்ட் அதிரடி தீர்ப்பு!

துருக்கி நிலநடுக்கத்திற்கு இந்தியாவில் இருந்து மீட்பு படைகளும், மருந்துகளும் அனுப்பி வைக்கப்ட்டது. மேலும், துருக்கிக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். துருக்கி நிலநடுக்க சம்பவத்திற்கு உலகில் உள்ள பல தலைவர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக இயற்கை பேரிடர் நடப்பதற்கு முன்பு விலங்குகளும், பறவைகளும் அதனை முன்கூட்டியே கணிக்கும் என சொல்வதுண்டு. அந்த வகையில் துருக்கியில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே அந்த நகரத்தை சுற்றி வட்டமடித்தவாறு பறவைகள் பறந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளலங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதே போல, டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என வரைபடத்தில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.