ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இருந்து ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில், தொடர்ந்து, அமமுக வேட்பாளரும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால், இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு […]
