Cow Hug Day: கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் பிப். 6ஆம் தேதியிட்ட அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பிப். 14ஆம் தேதி பசுமாடு அணைப்பு (கட்டிப்பிடிக்கும்) தினமாக மக்கள் அனுசரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. அந்த தினத்தால் அன்பு உணர்வு பரவும் மற்றும், கூட்டு மகிழ்ச்ச்சி ஊக்கப்படுத்தப்படும்.
“தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாடலாம்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பசுக்களை கட்டிப்பிடிப்பது “உணர்ச்சி வளம்” மற்றும் “தனிநபர் மற்றும் கூட்டு மகிழ்ச்சியை” அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த நோட்டீசில், “மேற்கத்திய கலாச்சாரத்தின் முன்னேற்றம்” காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், “மேற்கத்திய நாகரிகத்தின் திகைப்பூட்டும் நமது உடல், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மாற்றியுள்ளது.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கருத்து மோதல் நடைபெற்று வருகிறது. பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பசுமாடு பாதுகாப்பு சார்ந்து பல்வேறு திட்டங்களை உருவாக்கியது. மேற்கு வங்க மக்களவை உறுப்பினர், மஹு மொய்த்ரா,”இப்போது அரசாங்கம் நமக்காக காதலர் தின திட்டங்களை வகுத்துள்ளது…” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பிப். 7ஆம் தேதி முதல், பிப். 14ஆம் தேதிவரை வேலைன்ஸ்டைன் வாரம் கொண்டாடப்படுவது இயல்பாகும்.