வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. இந்திய சுழல்வீரர் ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, நாக்பூரில் இன்று (பிப்.,9) நடக்கிறது. ‛டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் ‛பேட்டிங்’ தேர்வு செய்தார்.
இந்திய அணியில் பரத் மற்றும் சூர்யகுமார் அறிமுகமாகினர். அதன்படி, முதல் இன்னிங்ஸை துவக்கிய ஆஸி., அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 2வது ஓவரின் முதல் பந்தில் சிராஜ்-ன் வேகத்தில் கவாஜா, வார்னர் தலா 1 ரன்னில் வெளியேறினர். இதனால் 2 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

இதனைத்தொடர்ந்து வந்த லபுஷேன், ஸ்மித் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லபுஷேன் 49 ரன்னில் அவுட்டானார். ரென்ஷா (0), ஸ்மித் (37) ஆகியோரும் அடுத்தடுத்து ஜடேஜா சுழலில் சிக்கினர். அலெக்ஸ் கேரி (36), பாட் கம்மின்ஸ் (6) அஸ்வின் பந்தில் வெளியேறினர்.
மர்பி (0), ஹேன்ட்ஸ்கோம்ப் (31), ஸ்காட் (1) ஆகியோரும் விரைவாக வெளியேற, ஆஸ்திரேலிய அணி 177 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. நாதன் லையன் (0) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்கள், அஸ்வின் 3 விக்கெட்கள், சிராஜ் மற்றும் ஷமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement