புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி, 13-ந் தேதி முடிவடைகிறது. இதையொட்டி, மக்களவை பா.ஜனதா எம்.பி.க்களுக்கு அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. 13-ந் தேதிவரை, மக்களவைக்கு தவறாமல் வருமாறு அதில் கூறியுள்ளது.
மக்களவையில் பட்ஜெட் மீது பொது விவாதம் நடந்து வருவதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன. போதிய உறுப்பினர்கள் இல்லாததால், நேற்று முன்தினம் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது, பா.ஜனதா தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :