‘பிரதமராக இம்ரான் கான் தொடர்ந்திருந்தால்..’- முன்னாள் ராணுவ தளபதி பரபரப்பு.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 1996ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார். கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சிக்கு ஒரேயொரு எம்.பி. கிடைத்த நிலையில் 2007ஆம் ஆண்டு தேர்தலில் 80 எம்.பி.க்கள் கிடைத்தனர். 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்று, சிறு கட்சிகளின் உதவியோடு பிரதமர் ஆனார்.

சுமார் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில், பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதன் காரணமாக எண்ணெய், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 184.79 ஆக உயர்ந்தது.

இதனால் அங்கு கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவி வந்தது. பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளும் மேற்கொண்டன. பாகிஸ்தான் ராணுவமும் இம்ரான் கானுக்கு ஆதரவாக இல்லை. இதனால் அவர், எப்போது வேண்டுமானாலும் பதவி விலகுவார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.

இதனிடையே, பிரதமர் இம்ரான்கானை பதவிநீக்கம் செய்வதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இம்ரான் கானுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில் அவரது ஆட்சி கடந்த ஆண்டு கலைக்கப்பட்டது.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு வெளிநாட்டு சதி இருப்பதாகக் கூறி வருகிறார். இதற்கிடையே ஆளும் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பேரணி ஒன்றில் கலந்து கொண்ட இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது. இதனால் இம்ரான் கான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதையடுத்து தன்னைக் கொல்ல முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி முயற்சி செய்வதாக இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, தனது ஊழலால் சேமித்த பணத்தை கூலிப்படை மற்றும் தீவிரவாதிகளுக்கு கொடுத்து, என்னை கொல்ல முயற்சி செய்கிறார். எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு அவர் தான் பொறுப்பு’’ என்று கூறினார்.

இந்தநிலையில் பிரதமராக இம்ரான் கான் தொடர்ந்திருந்தால் பாகிஸ்தான் எனும் நாடே இருக்காது என முன்னாள் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர் ஜாவேத் சவுத்ரியுடனான கலந்துரையாடலில் முன்னாள் ராணுவ தளபதி

கமர் ஜாவேத் பாஜ்வா கூறும்போது, ‘‘அமைச்சரவைக் கூட்டத்தின் போது, சவுதி இளவரசர் முகமது பின் சல்மானைக் குறிப்பிடுவதற்காக ஒரு மோசமான பஞ்சாபி வார்த்தையை இம்ரான் கான் பயன்படுத்தினார்.

வால்மீகி விழாவில் நடிகர் கிச்சா சுதீப் கலந்து கொள்ளாததால் ரசிகர்கள் ஆத்திரம்

கடந்த ஆண்டு ஏப்ரலில் கான் வெளியேற்றப்பட்ட பிறகு, தேசிய சட்டமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்வதிலிருந்து கான் தடுத்தீர்களா என்றால் இல்லை. பிரதமரே! நீங்கள் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றீர்கள், நீங்கள் போட்டியிடுவதற்கு தொடர் இன்னும் உள்ளது என்று கூறினேன்.

உலகை உலுக்கிய பயங்கர நிலநடுக்கங்கள்…. 3 லட்சத்தை தாண்டி போன கொடூரம்!

அரசாங்கத்தை காப்பாற்றாதது இம்ரான் கானி தவறு. கடந்த காலங்களில் கானின் அரசாங்கத்தை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. எனது சொந்த நலனுக்காக செயல்பட்டிருந்தால், கானுக்கு தொடர்ந்து ஆதரவளித்து, கண்ணியத்துடன் ஓய்வு பெற்றிருப்பேன். மாறாக, நாட்டின் நலனுக்காக தனது சொந்த நற்பெயரைத் தியாகம் செய்வதைத் தேர்ந்தெடுத்தேன். இம்ரான் கான் பிரதமராக தொடர்ந்திருந்தால், பாகிஸ்தான் எனும் நாடே இப்போது இருந்திருக்காது’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.