
குடும்பத்துடன் சுற்றுலாவில் குஷ்பு
தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதிகளில் குஷ்பு, சுந்தர் சி முக்கியமானவர். சினிமா, டிவி, அரசியல் என பல்வேறு தளங்களில் பயணித்துக் கொண்டிருந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்பவர் குஷ்பு. தன்னைப் பற்றியும் அடிக்கடி ஏதாவது ஒரு அப்டேட் கொடுத்துக் கொண்டிருப்பார்.
தற்போது குடும்பத்தினருடன் துபாயில் உள்ள பிரபலமான ரிசார்ட் ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்து சில புகைப்படங்களைப் பதிவிட்டு, “முயற்சியிருந்தால் எதற்கும் ஒரு வழி உண்டு. உங்களது பிஸியான நேரத்திலும் சில தருணங்களை ஒதுக்குவது முடியாத ஒன்றல்ல. உங்களது அன்பானவர்களுடன் விடுமுறையைக் கொண்டாடுவது பேரின்பமானது. எங்களது இளைய மகள் வேலையில் பிஸியாக இருப்பதால் அவளை மிஸ் செய்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
குஷ்புவின் இளைய மகள் அனந்திதா தற்போது இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றுவதாகத் தகவல். 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் அவர் பிஸியாக இருப்பதால்தான் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லவில்லை எனத் தெரிகிறது.