ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை தீர்த்துவைப்போம்! தொழிலதிபரிடம் அண்ணாமலை உறுதி!!


 ஈழத்தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க பா.ஜ.க. திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் கொண்டுள்ள பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும், பிரபல தமிழ் தொலதிபரான கந்தையா பாஸ்கரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பின்போதே அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் கொண்டுள்ள பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரபல தமிழ் தொலதிபரான கந்தையா பாஸ்கரன் அவர்களை .
நேற்றைய தினம் யாழ்பாணத்தில் சந்தித்துள்ளார்.

அண்ணாமலை அவர்களின் அழைப்பின் பெயரில் அந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும், தமிழ் மக்கள் எதிர்கொண்டுவருகின்ற பல்வேறு அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் சம்பந்தமாக தமது கலந்துரையாடல்கள் அமைந்திருந்ததாகத் தெரிவித்த கந்தையா பாஸ்கரன், ஈழத்தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க பா.ஜ.க. திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்ததாகவும் கூறினார்.

குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிக அக்கறை கொண்டுள்ளதாக அண்ணாமலை தன்னிடம் கூறியதாகவும் பாஸ்கரன் தெரிவித்தார்.

யாழ்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாச்சார மையத்தின் அங்குரார்பண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்ஜ லோ முருகன் மற்றும் பா.ஜா.க. தமிழ் நாட்டு மானிலத் தலைவர் அண்ணாமலை போன்றோர் யாழ்ப்பாணம வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.