விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து இயக்குநர் ஷங்கர் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட படம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வருபவர் ஷங்கர். ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் முதல் 2.o வரை அனைத்து படங்களுமே வசூலில் சாதனை படைத்துள்ளன. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக 2.o திரைப்படம்தான் வெளியானது. அதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகாத நிலையில் தற்போது தமிழில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தையும் இயக்கி வருகிறார். AK 62, Vignesh Shivan: கையிலேயே வெண்ணெய் இருக்கு… விக்னேஷ் சிவனின் அதிரடி திட்டம்!
ஷங்கர் திட்டம்இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ஆர்சி 15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் உள்ள ஷங்கர் சார்மினாரில் படப்பிடிப்பு நடைபெறுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அப்டேட் கொடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஷங்கர் குறித்து ஒரு மெகா செய்தி அடிபட்டு வருகிறது. அதாவது இயக்குநர் ஷங்கர் நடிகர் விஜய்யையும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானையும் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Leo: ஒரு வேளை அப்படி இருக்குமோ? திடீரென லியோ படத்திற்கு விளம்பரம் செய்த பிரபல நடிகர்!
விஜய் ஷாருக் கான்நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். வசூலிலும் கிங்காக உள்ளார். இதேபோல் பாலிவுட்டில் வசூல் மன்னனாக வலம் வருபவர் நடிகர் ஷாருக் கான். சமீபத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், 800 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இந்நிலையில் விஜய்யையும் ஷாருக்கானையும் வைத்து இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்ட படத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Dada: அப்படியே அந்ந படத்தோட அட்ட காப்பி… டாடா படத்தை கழுவி ஊற்றிய ப்ளுசட்டை மாறன்!
900 கோடி பட்ஜெட்மேலும் தண்ணீருக்கு அடியில் நடக்கும் கதையாக இப்படம் உருவாக்கப்பட உள்ளதாகவும் இப்படத்தின் பட்ஜெட் 900 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. வடக்கில் ஷாருக்கானும் தெற்கில் விஜய்யும் வசூல் அரசர்களாக உள்ளனர். இந்நிலையில் இருவரும் இணைந்து நடித்தால் அந்தப் படம் வசூலில் எந்த குறையும் வைக்காது என்பதால் இரு நடிகர்களும் ஒப்புக் கொண்டால் இந்த பிரம்மாண்ட புராஜெக்ட் சாத்தியமாகும் என கூறப்படுகிறது. Dada Review: டாடா படம் பிடிக்கலன்னா.. டிக்கெட் காசு கொடுத்துடுறேன்… சவால் விடும் பிரபலம்!
நல்ல நட்புஅதோடு விஜய்க்கும் ஷாருக்கானுக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது. சமீபத்தில் வெளியான பதான் படத்தின் ட்ரெயிலரை தமிழில் நடிகர் விஜய்தான் வெளியிட்டார். ஷாருக்கானின் ஜவான் படத்திலும் விஜய் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். இதேபோல் ரசிகர்களிடம் பேசும் ஷாருக்கான் விஜய் பற்றி புகழ்ந்து வருகிறார். இருவருக்கும் இடையிலான நல்ல நட்பு நிலவி வரும் நிலையில் இருவரும் இணைந்து பிரம்மாண்ட படத்தில் நடித்தால் நிச்சயம் மாஸாகதான் இருக்கும். ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
Rachitha Mahalakshmi: மறக்க முடியாத நாள்.. கதறல் போட்டோவை வெளியிட்ட பிக்பாஸ் ரச்சிதா.. தேற்றும் ரசிகாஸ்!
Vijay Shah rukh khan