சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் இன்று 200வது நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு, போராட்டக்கார்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், திமுக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை தவறி வருகிறது, இரட்டை நிலையை எடுக்கிறது என விமர்சித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2ஆவது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. […]
