சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கேஎஸ் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 5 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, தற்போது 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படஉ ள்ளது. இந்த நிலையில், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி […]
