புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி எதிரில் 5 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்க கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிப்பு வெளியாகி பணிகள் தொடங்கப்பட்டது.
சுமார் 9 கோடி மதிப்பீட்டில் சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கான பூங்கா, உடற்பயிற்சி கூடம், கணிதம் மற்றும் அறிவியல் உபகரணங்கள், இசை நீரூற்று, விலங்குகள், பறவைகள் என பல்வேறு அம்சங்களுடன் பூங்கா தயாராகி வருகிறது.
தற்போது இந்த பூங்காவின் பணிகள் முடிவடைய உள்ள நிலையில், மார்ச் மாதத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த பூங்காவில் மையப் பகுதியில் பேனா சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவாக கடலுக்குள் பேனர் சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இது சுற்றுச்சூழலை கெடுக்கும் என்பதால் சிலை வைக்கக் கூடாது என தமிழகத்தில் எதிர்பார்க்கலைகள் கிளம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.