புதுடெல்லி: டெல்லியில் புதிய கலால் கொள்கையை கெஜ்ரிவால் அரசு கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி கொண்டு வந்து, பின்னர் அது திரும்ப பெறப்பட்டது. புதிய கலால் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்க துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மகுண்டா சீனிவாஸ் ரெட்டியின் மகன் ராகவ் மகுண்டாவை அமலாக்க துறையினர் நேற்று முன்தினம் கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை இரண்டுவார காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறை முடிவு செய்துள்ளது. டெல்லி கலால் கொள்கை மோசடி வழக்கில் ராகவ் மகுண்டா ஒன்பதாவது நபராக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இந்த வாரத்தில் இது 3வது கைது நடவடிக்கையாகும்.
