#BREAKING: தவறான சிகிச்சையால் நிரந்தர பாதிப்பு.. இலங்கை பெண்ணுக்கு ரூ.40 லட்சம் நிவாரணம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

பிரான்சில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஃப்ளோரா என்பவர் கருத்தரிப்பு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஜி.ஜி மருத்துவமனையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சேர்ந்துள்ளார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருப்பையில் கட்டி வளர்வதாக கூறி அதற்கு லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அதன் பிறகு அவருக்கு அடி வயிற்றில் வலி ஏற்பட்டதுடன் மூச்சு திணறலாலும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய ஒப்புதல் இல்லாமல் இரண்டாவது முறையாக மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து அவரை மெட் அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றியுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் லேப்ரோஸ்கோபிக் சிகிச்சையின் பொழுது பெருங்குடலை சேதப்படுத்திய விவகாரம் தெரியவந்தது.

 

அதற்காக மூன்றாவதாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் ஃப்ளோராவுக்கு நிரந்தரமான உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் வலிக்கும் ரூ.1.5 கோடி நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன் ஜி.ஜி மருத்துவமனை செய்த தவறான சிகிச்சையால் ஏற்பட்ட மன உளைச்சல், வலி மற்றும் நிரந்தரமான பாதிப்புக்கு ஆளாகியுள்ள ஃப்ளோராவுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கு தொடரப்பட்ட 2014 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை ஆண்டுக்கு 12% வட்டி வழங்க வேண்டும்” என ஜி.ஜி மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.