Vedaant Madhavan: நீச்சல் போட்டியில் 5 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மகன் வேதாந்த்: மாதவன் ஹேப்பி

Vedaant: மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் போட்டியில் 7 பதக்கங்கள் வென்றுள்ளார்.

வேதாந்த்நடிகரும், இயக்குநருமான மாதவனின் ஒரே மகன் வேதாந்துக்கு தந்தை வழியில் நடிகர் ஆகும் ஆசை இல்லை. அதற்கு மாதவனும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வேதாந்துக்கு நீச்சல் மீது தான் ஈடுபாடு. அதை புரிந்து கொண்டு மகனை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார் மாதவன். இந்நிலையில் தான் அந்த தங்க மகன் மீண்டும் வென்றிருக்கிறார்.
வெற்றிநீச்சல் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 1,500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் தங்கம் வென்றிருக்கிறார் வேதாந்த். மேலும் 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். மகன் வெற்றி பெற்று பரிசு வாங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ஆண்டவன் அருளால் வேதாந்த் வென்றிருப்பதாக தெரிவித்துள்ளார் மாதவன்.

அப்பா
வாழ்த்துVignesh Shivan:ஏ.கே. 62ல் இருந்து நீக்கப்பட்டும் விக்னேஷ் சிவன் செய்த காரியம்: அஜித் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்மாதவனின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, வாழ்த்துக்கள் வேதாந்த். இந்த பையன் ஒரு நாள் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தருவார். தன் மகன் வெற்றி பெறுவதை பார்க்கும் போது எந்த தகப்பனுக்கு தான் பெருமையாக இருக்காது. இது உங்கள் மகனின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு மாதவன். ஸ்போர்ட்ஸில் பிள்ளையை ஊக்குவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளனர்.

மாதவன் மகன்முன்னதாக வேதாந்த் வெற்றி பெற்ற போதும் மாதவன் ட்வீட் போட்டார். அதை பார்த்து மாதவனின் மகன் வெற்றி என செய்திகள் வெளியானது. அது மாதவனின் மகன் இல்லை வேதாந்த். அவருக்கு என்று ஒரு பெயர், அடையாளம் இருக்கிறது. அதை மீடியாக்கள் அழித்துவிட வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.
மகன்பெயர் விவகாரம் குறித்து வேதாந்த் கூறியதாவது, ஆர். மாதவனின் மகன் என்கிற டைட்டில் எனக்கு வேண்டாம். எனக்கென்று ஒரு பெயரை உருவாக்க விரும்புகிறேன். நான் யாராக இருக்கிறேன் என்பதற்காகத் தான் என்னுடன் போட்டியிடுபவர்கள் என்னை மதிக்கிறார்கள் என்றார்.

முக்கியம்முன்பு மகன் பற்றி மாதவன் கூறியதாவது, உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வேதாந்த் வெற்றி பெற்று வருகிறார். அவருக்கு பிடித்த நீச்சல் என் கெரியரை விட எனக்கு மிகவும் முக்கியம் ஆகும் என்றார்.

​Leo, Arjun: அய்யய்யோ, லியோவில் அர்ஜுன் வேற மாதிரியாமே: அப்போ விஜய்ணா கதி?!

மித்ரன் ஜவஹர்கெரியரை பொறுத்தவரை மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் மாதவன். தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த கையோடு மாதவனை இயக்கவிருக்கிறார் மித்ரன். இது குறித்து அறிந்த தனுஷ் ரசிகர்களோ, மித்ரனுக்கும், மாதவனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.