திருச்சி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் முள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் ராஜேஷ் (22). இவர் 16 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து கொள்வதற்காக கடத்திச் சென்றுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ராஜேஷ் சிறுமியுடன் இறைவன் நகர் பகுதியில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜேஷ் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் ராஜேஷ் கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.