60 ஆண்டுகளாக தூங்காமல் வாழும் 80 முதியவர்: பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான காரணம்


வியட்நாமில் 60 ஆண்டுகளாக தூங்காமல் முதியவர் ஒருவர் வாழ்ந்து வருவது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனித உடலின் அத்தியாவசிய தேவை

மனித உடலுக்கு அத்தியாவசிய தேவைகளான உணவு, தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றுடன் துக்கம் இன்றியமையாத ஒன்று.

மனிதன் ஒருவனுக்கு துக்கம் பற்றாக்குறையாக இருந்தால் இதய நோய்கள் முதல் மனநல நோய்கள் வரை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

60 ஆண்டுகளாக தூங்காமல் வாழும் 80 முதியவர்: பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான காரணம் | 80 Yr Old Vietnam Man Lost His Sleep For 60 YearsThai Ngoc

சாரசரியாக ஒரு நாளில் மனிதனுக்கு 8 மணி நேரம் தூக்கம் அத்தியாவசியமானது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


60 ஆண்டுகளாக தூங்காத மனிதர்

இந்நிலையில் வியட்நாமில் 80 வயது முதியவர் ஒருவர்  60 ஆண்டுகளாக தூங்காமல் வாழ்ந்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தாய் நகோக் என்ற முதியவர் கிட்டத்தட்ட 1962ம் ஆண்டு முதல் தூங்காமல் உயிர் வாழ்ந்து வருகிறார்.
20 வயதில் முதியவருக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு பிறகு தாய் நகோக் தூக்கமின்றி தவித்து வருகிறார்.

60 ஆண்டுகளாக தூங்காமல் வாழும் 80 முதியவர்: பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான காரணம் | 80 Yr Old Vietnam Man Lost His Sleep For 60 Years

இத்தனை வருடங்களாக அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் என எவருமே இத்தனை ஆண்டுகளாக நகோக் துங்கியதை கண்டது இல்லை என தெரிவித்துள்ளனர்.

இது பற்றி அறிந்த யூடியூப் சேனல் ஒன்று அவரது அன்றாட வாழ்க்கையை படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.