திருப்பூரின் நிலை சரியில்லை, கடன் கேட்காதீங்க என்று மளிகை கடைக்காரர் தனது வாடிக்கையாளர்களுக்கு அடித்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
திருப்பூர் மாநகர் பகுதிக்கு உட்பட்ட ஒரு மளிகைக் கடையில் வைக்கப்பட்டுள்ள நோட்டீஸ் வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அந்த நோட்டீஸில், “தற்போது திருப்பூரின் நிலை மிக மோசமாகஉள்ளதால், எனக்கு மளிகை பொருள் கொடுக்கும் ஏஜென்சிகள், பணம் கொடுத்தால் மட்டுமே பொருட்களை கொடுப்போம் என்று சொல்லிவிட்டார்கள்.
எனவே, உங்களுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் நிதி இல்லை. என் கடையில் கடன் என்ற பேச்சுக்கே இடமில்லை. நீங்களும் கடன் கொடுப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.
கடை வாடகை, ஆட்கள் சம்பளம், மின் கட்டணம் என செலவுகள் அதிமாகிவிட்டது. என் கடையில் கடன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று அந்த நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்க்கு முக்கிய காரணம், தொழிலாளர் நகரமான திருப்பூரில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து உள்ளது.
போதிய ஆர்டர்கள் இல்லை, நூல் விலை உயர்வு, கடன் வட்டி விகித உயர்வு, மின்சார கட்டண உயர்வு காரணமாக சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது.