சீனாவில் மகனை மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தாய்: இறுதியில் மருத்துவர் வழங்கிய அதிர்ச்சி


திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த மகனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்ற தாய்க்கு மருத்துவர் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருமணத்திற்கு கட்டாயப்படுத்தும் நோய்

சீனாவில் 38 வயதான வாங் என்ற குடும்ப பெயர் கொண்ட நபர் ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் ஒவ்வொரு சந்திர புத்தாண்டு அன்றும் அவரது தாயால் மனநல மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்.

சந்திர புத்தாண்டில் ஒரு காதலியை வீட்டிற்கு அழைத்து வரவில்லை என்ற காரணத்தால், வாங்கிற்கு  “தலையில் ஏதோ பிரச்சனை” என்று அவரது தாயார் நம்பியுள்ளார்.

சீனாவில் மகனை மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தாய்: இறுதியில் மருத்துவர் வழங்கிய அதிர்ச்சி | Force Marry Disorder Chinese Mother Single Son 38SCMP composite

இதையடுத்து 2020ம் ஆண்டு முதல் ஒவ்வொரு பிப்ரவரி 4ம் திகதியும் அவரது தாயார் அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று வருகிறார்.


மருத்துவரின் அதிர்ச்சிகரமான பதில்

இந்நிலையில் இந்த ஆண்டும் மகன் வாங்கை அவ்வாறு மனநல மருத்துவரிடம் அவரது தாய் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் இந்த முறை மகன் வாங்கை சோதிக்காமல், அவரது தாயிடம் “தனது மகனுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கும்” மனநல கோளாறு உங்களுக்கு தான் வளர்ந்து விட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் மகனை மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தாய்: இறுதியில் மருத்துவர் வழங்கிய அதிர்ச்சி | Force Marry Disorder Chinese Mother Single Son 38Shutterstock

இது தொடர்பாக வாங் தெரிவித்த தகவலில், என்னை திருமணமாகாத நபராக அடையாளப்படுத்த கூடாது. நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன், சரியான நபரை சந்திக்க வில்லை. நான் திருமணம் செய்து கொள்ளாததால் என் அம்மாவுக்கு தூங்க முடியாது, அதனால் நான் மிகவும் வருத்தமாக உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கிராமப்புற சொந்த ஊரில் “சூப்பர் ஓல்ட் சிங்கிள் மேன்” என்று தாம் அழைக்கப்படுவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 

சீனாவில் மகனை மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தாய்: இறுதியில் மருத்துவர் வழங்கிய அதிர்ச்சி | Force Marry Disorder Chinese Mother Single Son 38Weibo



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.