மகனை அணைத்தபடி இடிபாடுகளுக்கும் புதைந்துபோன தாயார்: 5 நாட்களுக்கு பின்னர் சிலிர்க்க வைத்த சம்பவம்


துருக்கியின் Kahramanmaras பகுதியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி, ஐந்து நாட்களுக்கு பின்னர் தாயாருடன் 9 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்தில் சிக்கி புதைந்து

துருக்கியின் Kahramanmaras பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மொத்தமாக சிதைந்துபோயுள்ளது.
சர்வதேச மீட்பு குழுவினர், குரலெழுப்பியபடி ஒவ்வொரு அங்குலமாக தேடி வருகின்றனர்.

மகனை அணைத்தபடி இடிபாடுகளுக்கும் புதைந்துபோன தாயார்: 5 நாட்களுக்கு பின்னர் சிலிர்க்க வைத்த சம்பவம் | Boy Pulled Out Alive Five Days Underground Mother

@skynews

இந்த நிலையில் லெய்லா என்ற பெண்மணியை மீட்ட சம்பவத்தை வெளியிட்டுள்ளனர் அங்குள்ள மக்கள்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்த லெய்லா, நிலநடுக்கத்தில் சிக்கி புதைந்துபோயுள்ளார்.

இத்தாலியை சேர்ந்த ஒரு குழுவினரே, லெய்லாவின் குரலை முதலில் அடையாளம் கண்டுள்ளனர்.
பெண் ஒருவர் முனகும் சத்தம் கேட்டதை பதிவு செய்த குழுவினர், மிக கவனமாக அப்பகுதியில் இருந்து இடிபாடுகளை அப்புறப்படுத்த தொடங்கியுள்ளனர்.

மகனை அணைத்தபடி இடிபாடுகளுக்கும் புதைந்துபோன தாயார்: 5 நாட்களுக்கு பின்னர் சிலிர்க்க வைத்த சம்பவம் | Boy Pulled Out Alive Five Days Underground Mother

@skynews

மிக ஆழத்தில், லெய்லாவின் குரல் கேட்டுள்ளது. ஆனால் மிகவும் மோசமான நிலையில் அவர் சிக்கியிருப்பது மட்டும் மீட்பு குழுவினருக்கு புரிந்துபோயுள்ளது.
ஏற்கனவே அந்த கட்டிட இடிபாடுகளில் இருந்து லெய்லாவின் மகளையும் கணவரையும் மீட்டுள்ள நிலையில், லெய்லா மட்டும் சிக்கலான கட்டத்தில் இருந்துள்ளார்.

மகனை அணைத்துக்கொண்டு ஆபத்தான கட்டத்தில்

லெய்லா தமது 9 வயது மகனை அணைத்துக்கொண்டு ஆபத்தான கட்டத்தில் இருந்துள்ளார்.
மட்டுமின்றி, அப்பகுதியில் தொடர்ந்து நில அதிர்வுகளும் பதிவாகி வந்ததால், மீட்பு நடவடிக்கை தாமதமாகியுள்ளது.

இறுதியில் ஒரு இரவு முழுவதும் கவனமாக முன்னெடுத்த நடவடிக்கையின் இறுதியில், சிறுவனை நெருங்கியுள்ளனர்.
ஐந்து நாட்களாக தாயாரின் அரவணைப்பில் உயிருடன் இருந்துள்ளான் 9 வயது சிறுவன் Ridvan.

மகனை அணைத்தபடி இடிபாடுகளுக்கும் புதைந்துபோன தாயார்: 5 நாட்களுக்கு பின்னர் சிலிர்க்க வைத்த சம்பவம் | Boy Pulled Out Alive Five Days Underground Mother

@skynews

மிக ஆபத்தான கட்டத்தில் இருந்த Ridvan-ஐ மருத்துவர்கள் உடனடியாக சிறப்பு கவனம் தேவையென அனுப்பி வைத்துள்ளனர்.
நீண்ட ஐந்து நாட்கள் தாயாரின் அரவணைப்பில் இருந்துள்ளான்.

மட்டுமின்றி, உடலின் பாதி நசுங்கிப்போயிருந்தது. கடும் குளிர் காரணமாக மூச்சுவிடவே சிரமத்தில் இருந்துள்ளான்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக லெய்லாவை உயிருடன் மீட்க முடியாமல் போயுள்ளது என்றே மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.