தென்அமெரிக்க நாடான பொலிவியாவின் ஓருரோ நகரில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் சுமார் 5 ஆயிரம் இசைக்கலைஞர்கள் வண்ணமயமான உடையணிந்து இசைக்கருவிகளை வாசித்தனர்.
பழங்குடியின உரு மக்கள் தங்களை பாதுகாக்கும் வாக்கா கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் இத்திருவிழாவில், பொலிவியா ஜனாதிபதி லூயிஸ் ஆர்க் சக அதிகாரிகளுடன் சேர்ந்து நடனமாடினார்.
பழங்குடியினரின் சடங்குகளை ஸ்பெயின் அரசு தடை செய்த பிறகு கிறிஸ்தவ மத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் சுமார் 2 மணி நேரத்திற்கு இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன.