Kavin: பீஸ்ட்க்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனம்: நெல்சன் அண்ணாக்கிட்ட கத்துக்கிட்டது இதுதான்.!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவர் கவின். இதனையடுத்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மூன்றாவது சீசனில் போட்டியாளராக நுழைந்த இவருக்கென்று தனியொரு ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இந்நிகழ்ச்சிக்கு பின் லிப்ட், ஆகாச வாணி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது கவின் நடிப்பில் ‘டாடா’ படம் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கியுள்ள இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அபர்ணா தாஸ், பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் கவின் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நெல்சன் திலீப்குமார் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வார் என்பது குறித்து பேசியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் விஜய்யின் ‘பீஸ்ட்’. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. நெல்சனையும் விஜய் ரசிகர்கள் பலரும் விளாசி தள்ளினர்.

இந்நிலையில் நெல்சன் குறித்து பேட்டியில் பேசிய கவின், “விஜய் டெலி அவார்ட்ஸில் விருது வாங்கிவிட்டு அவரிடம் இதுதான் அண்ணா எனது முதல் விருது என்று சொன்னேன். சரி ஓகே வாடா அடுத்த வேலையை பார்ப்போம்னு சொன்னார். என்னுடைய முதல் படம் கொஞ்சம் நெருக்கடியில் இருந்த போதும் சரி ஓகேடா வா அடுத்த வேலையை பார்ப்போம்னு சொன்னார்.

Malavika Mohanan: நயன்தாராவை ‘அப்படி’ சொன்னேனா.?: கடுப்பான மாளவிகா மோகனன்.!

நான் அவரிடம் பார்த்த ஒரு விஷயம் என்னவென்றால் வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் இரண்டையும் நாம் ஒரேமாதிரி எடுத்துக்கொண்டால் நம்முடைய மனநிலை எந்த குழப்பமும் அடையாமல் அமைதியாக இருக்கும் என்பதுதான்” என்று தெரிவித்துள்ளார். நெல்சனுடன் டாக்டர், பீஸ்ட் படங்களில் நடித்த கவின் அவர்குறித்து தற்போது அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

துணிவுக்கு பிறகு குடும்பத்துடன் திரையரங்கில் படம் பார்த்த ஷாலினி அஜித்: வைரலாகும் வீடியோ.!

நெல்சன் தற்போது ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.