வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: உளவு பலூன் விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே சில தினங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பலூன்கள் தான் 10 முறை தங்களது வான் வெளிக்கு வந்ததாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவுக்கு சீனாவுக்கு இடையே எப்பொழுதும் பதற்றமான ஒரு சூழலே நிலவி வந்தது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு சீன பலூன் அமெரிக்க வான்வழியில் நுழைந்தது. அதை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் சீனா இப்போது பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல் 10 முறை அமெரிக்க பலூன்கள் சீன வான்வெளியில் நுழைந்துள்ளது.

அமெரிக்கா இதுபோல மற்ற நாடுகளின் வான்வெளியில் சட்டவிரோதமாக நுழைந்து உளவு பார்ப்பது ஒன்றும் புதிதானது அல்ல. கடந்த ஆண்டு முதல், அமெரிக்க பலூன்கள் சீன அதிகாரிகளின் அனுமதியின்றி 10 முறைக்கு மேல் சட்டவிரோதமாகச் சீன பகுதிகளுக்கு மேலே பறந்துள்ளன.
அமெரிக்காவின் பலூன் சட்ட விரோதசாக சீனாவின் வான்வெளிக்குள் நுழைவதைப் பற்றி மேலும் தகவல் வேண்டும் என்றால் அமெரிக்காவிடம் கேளுங்கள். அவர்களே இதை ஒப்புக் கொண்டு விளக்கமாக எடுத்துரைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement