கிட்டப்பா முதல் கௌதம் கார்த்திக் வரை – காதலித்து திருமணம் செய்துகொண்ட ஹீரோ – ஹீரோயின்கள்!

நூறாண்டு கடந்த தமிழ் சினிமாவில் காதல் கதைகளுக்கு மட்டும் என்றுமே ஓர் தனித்துவம் உண்டு. அந்தக் காதலை காட்சிகள் மூலம் தத்ரூபமாக வடித்து, கண்களுக்கு விருந்து கொடுக்கும் நம் ஹீரோ, ஹீரோயின்கள் மனதையும் தொட்டு விடுவார்கள். அந்த காதல் சில நேரங்களில் எல்லைகளைக் கடந்து, கதையில் மட்டுமல்ல வாழ்விலும் இணைந்துவிடும்.

அப்படி, ரீலில் மட்டுமின்றி வாழ்விலும் ரியல் ஜோடிகளாக இணைந்த சில தம்பதிகள், தமிழ் சினிமாவின் காதல் சின்னங்களாக இருக்கிறார்கள். இதற்கு முற்கால சினிமாவில் சில தம்பதிகளை உதாரணமாக சொல்லலாம்.. 

எம்.ஜி.ஆர்-ஜானகி, ஜெமினி கணேசன்- சாவித்ரி, என்.எஸ்.கலைவாணர்-மதுரம், கிட்டப்பா-கே.பி.சுந்தராம்பாள், விஜயகுமார்-மஞ்சுளா, பாக்யராஜ்-பூர்ணிமா உள்ளிட்டோர், கலையில் மட்டுமல்ல காதல் வாழ்விலும் கைகோர்த்து நின்ற தம்பதிகள். அந்த பட்டியலில் அண்மையில் இணைந்திருக்கிறார்கள், கவுதம் கார்த்திக்-மஞ்சுமா மோகன் தம்பதி.

image

கவுதம் கார்த்திக்-மஞ்சுமா மோகன் 

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கவுதம் கார்த்தி, ‘கடல்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜ வை’… ‘ரங்கூன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், வெற்றியை தக்க வைத்துக்கு கொண்டு அச்சமின்றி சினிமாவில் அதிரடி காண்பித்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். மலையாள தேசத்து நாயகியான மனம் மயக்கும் புன்னகையில், தமிழ் ரசிகர்கள் யாராலும் இவரை விட்டு தள்ளிப்போக முடியவில்லை. ‘தேவராட்டம்’ படத்தில் இணைந்து நடித்தபோது இவ்விருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அந்த காதல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்திருக்கிறது.

ஆதி-நிக்கி கல்ராணி 

கவுதம் கார்த்திக்-மஞ்சுமா மோகன் ஜோடிக்கு முன்னதாக திருமண பந்தத்தில் இணைந்தவர்கள், ஆதி-நிக்கி கல்ராணி ஜோடி. 2017ஆம் ஆண்டு வெளியான ‘மரகத நாயணயம்’ திரைப்படத்தில் ஹீரோ-ஹீரோயினாக இணைந்த இவரும், பிறகு காதல் வாழ்விலும் இணைந்தனர். ‘டார்லிங்’ படத்தில் பேயாக நடித்து பிரபலமான நிக்கி, ஆதியின் கண்களுக்கு மட்டும் தேவதையாக தெரிந்திருக்கிறார். கரம் பிடித்து அழைத்துச் சென்ற இவர்களின் காதல், திருமணம் எனும் பந்தத்தில் இணைந்துவிட்டது.

image

அஜித்-ஷாலினி 

சினிமாவில் கொஞ்சம் பின்னோக்கி சென்றால் அதில் முக்கிய இடம்பிடித்திருக்கும் காதல் ஜோடி, அஜித்-ஷாலினி தம்பதி. தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித், அப்போது வளர்ந்துவரும் கதாநாயகன் மட்டுமே. அப்படிப்பட்ட சூழலில் அவருக்கு ஆக்ஷன் அந்தஸ்தைக் கொடுத்தது ‘அமர்களம்’ திரைப்படம். 1999ஆம் ஆண்டு ‘அமர்க்களம்’ படத்தில் அஜித்துடன் இணைந்தார் ஷாலினி. அந்த படத்தில் அவர்களின் காதல் காட்சிகள் மட்டும் தனித்துவமாக தெரியும். இவருக்கும் இடையே காதல் இருப்பதாக காத்துவாக்கில் வந்தந்திகள் பரவத் தொடங்கின. அதன்பின் ஷாலினி – மாதவன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது ‘அலைபாயுதே’ திரைப்படம்.. அதில் முதலில் அஜித்தை ஹீரோவாக போடச் சொல்லி ஷாலினி சிபாரிசு செய்தார் என்ற தகவலும் உண்டு. அப்போதுதான் அஜித் – ஷாலினி இடையேயான காதல் திரைத்துறையில் பேசுபொருளானது. அன்பின் வழியில் இணைந்து பழகத் தொடங்கிய இருவரும் இறுதியில் திருமண பந்தத்தில் இணைந்து, ரசிகர்களை மகிழ்வித்தனர்.

image

சூர்யா – ஜோதிகா

அஜித்-ஷாலினிக்கு ‘அமர்க்களம்’ என்றால், சூர்யா – ஜோதிகாவுக்கு ‘காக்க காக்க’ திரைப்படம்.. ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் இணைந்த இவ்விருவரும், இதில் வரும் ஒவ்வொரு பாடலிலும் காதலை அள்ளித் தெளித்திருப்பார்கள். அதில் இருவருக்கும் இடையே work out ஆன கெமிஷ்ட்ரி, ‘காக்க காக்க’ படத்தில் தொடர்ந்தது. இப்படத்தின் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் சிபாரிசு செய்த ஜோதி, ஹீரோ வாய்ப்பை சூர்யாவுக்கு வாங்கிக் கொடுத்தார் என்ற தகவல்களும் உண்டு. விமர்சனங்கள் பல எழுந்தாலும், காதலன் சூர்யாவை கரம்பிடித்த ஜோதிகா, தன் ரசிகர்களின் இதயங்களில் முள்ளைத் தைத்தார்.

image

சினேகா-பிரசன்னா

அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா பட்டியலில் புன்னகை அரசி சினேகா-பிரசன்னா தம்பதியும் முக்கியமானவர்கள். அடுத்தடுத்த படங்களின் வெற்றிகளால் முன்னணி நடிகையான சினேகா, நட்சத்திர நாயகர்களின் படங்களில் பிசியாக இருந்தார். அப்போது, ‘அச்சமுண்டு, அச்சமுண்டு’ படத்தில் சினேகாவுடன் நடிக்கும் வாய்ப்பு பிரசன்னாவுக்கு கிடைத்தது. சினேகா-பிரசன்னாவுக்கு ரொமேன்ஸ் க்ளிக் ஆகிவிட்டது. சினிமாவில் தொடங்கிய அவர்களின் காதல் திருமண பந்தத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

image

கலையை கடந்து காதலிலும் இணைந்த இந்த ஜோடிகள், திருமண வாழ்விலும் காதலை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.