புதுடெல்லி: நாட்டில் 2019 முதல் 2021 வரை 1.12 லட்சம் தினக்கூலிகள் தற்கொலை செய்து உள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான கேள்வி தேசிய குற்ற ஆவண தகவல் அடிப்படையில் ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அளித்த பதில் வருமாறு: நாட்டில் 2019 முதல் 2021ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் 1.12 லட்சம் தினக்கூலிகள் தற்கொலை செய்து உள்ளனர்.
இவர்கள் தவிர குடும்ப தலைவிகள் 66,912 பேர், சுயவேலை செய்வோர் 53,661 பேர், சம்பள தாரர்கள் 43,420 பேர், வேலையில்லாதவர்கள் 43,385 பேர், மாணவர்கள் 35,950 பேர், விவசாய துறையில் 31,839 பேர் தற்கொலை செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.