லாகூர்,பாகிஸ்தானில், ஹிந்து மதத்திலிருந்து முதல் பெண் அரசு அதிகாரியாகியுள்ள சனா ராம்சந்த், அங்குள்ள ஹசனாப்தால் நகரின் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுஉள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர், சனா ராம்சந்த் குல்வானி, 27. டாக்டராக பணியாற்றி வந்த இவர், நம் நாட்டின், ‘சிவில் சர்வீசஸ்’ தேர்வுக்கு இணையாக, இங்கு நடந்த ‘சென்ட்ரல் சுப்பீரியர் சர்வீசஸ்’ தேர்வில், 2020ல் வெற்றி பெற்றார்.
முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற சனா, பயிற்சிக்குப் பின் அந்நாட்டு ஆட்சிப் பணியில் நேற்று சேர்ந்தார்.
இதன் வாயிலாக, பாக்.,கில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதல் பெண் அரசு அதிகாரி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
இவர் நேற்று பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹசனாப்தால் நகரின் உதவி ஆணையராக சனா நியமிக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement