புதுடில்லி, உச்ச நீதிமன்றத்தில் மேலும் இரண்டு புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை, 34 ஆக அதிகரித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான, ‘கொலீஜியம்’ பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து, நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், சஞ்சய் கரோல், பி.வி.சஞ்சய் குமார், அசனுதீன் அமானுல்லா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர், கடந்த 6ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.
இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால், குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, கொலீஜியம் ஏற்கனவே பரிந்துரைத்திருந்தது. இதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து ராஜேஷ் பிண்டால், அரவிந்த் குமார் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நேற்று பதவியேற்றனர். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி களின் எண்ணிக்கை, 34. தற்போது இரண்டு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளதன் வாயிலாக, உச்ச நீதிமன்றம் முழுமையான நீதிபதிகள் எண்ணிக்கையுடன் பணியைத் துவக்கவுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement