நடிகை ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆர் படத்தில் கமிட்டானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜான்வி கபூர்பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியில் வெளியான தடக் படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரிஸ், குன்ஜான் சக்ஸேனா தி கார்கில் கேர்ள், ரூஹி, குட் லக் ஜெர்ரி , மிலி ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.
Vishnu Edavan: காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பு.. விக்ரம் பட பிரபலம் மீது இளம்பெண் புகார்!
ஹாட் போட்டோஸ்தற்போது பவால், மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் மஹி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஜான்வி கபூர் அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. Vaathi Review: தனுஷின் ‘வாத்தி’ படம் எப்படி? வெளியான முதல் விமர்சனம்!
தெலுங்கு சினிமாஆனால் ஜான்வி கபூரின் தந்தையான தயாரிப்பாளர் போனி கபூர், ஜான்வி கபூர் எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அந்த தகவல் அத்துடன் ஓய்ந்து போனது. இந்நிலையில் ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவில் ஒப்பந்தமாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
Samantha: உடல்நலம் பெற பழனி முருகன் கோவில் பட்டிகட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்த சமந்தா!
2 கோடி சம்பளம்அதாவது ஆர்ஆர்ஆர் படத்தின் ஹீரோவான ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம் ஜான்வி கபூர். ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநரான கொரட்டல சிவா இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் நடிகை ஜான்வி கபூர். இப்படத்திற்காக நடிகை ஜான்வி கபூருக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.
AK 62, Vignesh Shivan: ஹீரோயின் விஷயத்தில் விளையாடிய விக்னேஷ் சிவன்? ஏகே 62 வாய்ப்பு கை நழுவி போனதுக்கு காரணம் இதுதானா!
23 ஆம் தேதி பூஜைபடத்தின் பூஜை வரும் 23 ஆம் தேதி ஹைத்ராபாத்தில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஜான்வி கபூர் கடைசியாக மிலி என்ற மலையாள ரீமேக் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு பெயரை பெற்றுத்தரவில்லை. இந்நிலையில் வசூலை குவித்த ஆர்ஆர்ஆர் பட நடிகருடன் ஜோடி சேருகிறார் நடிகை ஜான்வி கபூர்.
Dada: ‘கண்ணீர் வரும் அளவுக்கு அழ வைத்தார்கள்’ கவினின் ‘டாடா’ படத்தால் உடைந்துப்போன சூரி!
Janhvi Kapoor