டெல்லி: நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டில் (2019 முதல் 2021 வரை) தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரம், இவர்களில் அதிகம் பேர், தினக்கூலிகள், சுயதொழில் செய்வோர் என நாடாளுமன்றத்தில் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் 66,912 இல்லத்தரசிகள், 53,661 சுயதொழில் செய்பவர்கள், 43,420 சம்பளதாரர்கள் மற்றும் 43,385 வேலையில்லாதவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் […]
