புதுடில்லி- நம் நாட்டு தயாரிப்பான, ‘தேஜஸ்’ போர் விமானங்களை வாங்குவதற்கு அர்ஜென்டினா, எகிப்து நாடுகளுடன் பேச்சு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மத்திய அரசு நிறுவனமான, ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்’ தலைவரும், நிர்வாக இயக்குனர் கூறியதாவது: எகிப்து, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் தங்கள் விமானப் படைக்கு புதிய போர் விமானங்கள் வாங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதில் நம் நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்கள் வாங்குவது குறித்து பேச்சு நடந்து வருகிறது.
இதையடுத்து எகிப்து 20 போர்விமானங்களையும், அர்ஜென்டினா 15 போர் விமானங்களையும் வாங்க திட்டமிட்டுள்ளது. தவிர அமெரிக்க, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ்நாடுகளும் தேஜாஸ் போர் விமானங்கள வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement