புதுடில்லி புதுடில்லி அருகேயுள்ள ஒரு கிராமப்புற ஹோட்டலின் ‘பிரிஜ்’ஜில் இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், உணவக உரிமையாளரை நேற்று கைது செய்தனர்.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இதன் அருகே மித்ராவோன் என்ற கிராமத்தில், சாஹில் கலோட் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார்.
இந்நிலையில், அங்குள்ள பிரிஜ்ஜில் பெண்ணின் உடலை மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பிரிஜ்ஜில் இருந்து பெண்ணின் உடலை கைப்பற்றினர். பின், சாஹில் கலோட்டை கைது செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்து போன அந்தப் பெண், ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
அந்த ஹோட்டலில் வேலை செய்து வந்த இவருக்கும், சாஹிலுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதற்கிடையே, சாஹிலுக்கு கடந்த ௧௦ம் தேதி வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
இதற்கு, அப்பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ”போலீசாரிடம் புகார் செய்து, பலாத்கார வழக்கில் சிக்கவைத்து விடுவதாக சாஹிலை அப்பெண் மிரட்டியுள்ளார்.
”இதனால், சாஹில் அப்பெண்ணை கொலை செய்துள்ளார்,” என, போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் விக்ரம் சிங் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement