மார்பர்க் வைரஸ். உலகம் அடுத்து சந்திக்கப் போகும் பேரழிவை ஏற்படுத்துமா? என்ற அச்சம் உண்டாகியிருக்கிறது. இந்த பாதிப்பு ஆப்பிரிக்காவில் உள்ள ஈகுவடோரியல் கினியாவில் முதல் முறை உறுதி செய்யப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது எபோலா வகை வைரஸ் எனக் கூறப்படுகிறது. தற்போது வரை மார்பர்க் வைரஸ் தொற்றால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் ஈகுவடோரியல் கினியாவில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் செனகலில் உள்ள ஆய்வகத்திற்கு அடுத்தகட்ட பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
