தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை முதல், கோவை, திருநெல்வேலி, நாகை, சென்னை உள்பட பல இடங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல இடங்களில் தேசிய புலனாய்வு அவ்வப்போது சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புகளுடன் […]