புதுடில்லி நில அபகரிப்பு வழக்கில் பதிலளிக்கும்படி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு, உச்ச நீதிமன்றம், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
சென்னை துரைப் பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நிலம் தொடர்பாக, அதன் உரிமையாளர் பி.மகேஷ் மற்றும் அவருடைய சகோதரரான நவீன் குமார் இடையே பிரச்னை இருந்தது. இதில் நவீன் குமார், முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மருமகனாவார்.
ஜெயகுமார், அவருடைய மகள் ஜெயப்ரியா, மருமகன் நவீன் குமார், தன்னை மிரட்டி இந்த நிலத்தை. ௨௦௧௪ல் அபகரித்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவில் மகேஷ் புகார் கொடுத்தார். இதையடுத்து, ஜெயகுமார் உட்பட மூன்று பேர் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எப்.ஐ.ஆர்.,களை ரத்து செய்ய, கடந்தாண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தமிழக போலீஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் அமர்வு, ஜெயகுமார் உட்பட மூவருக்கும் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement