சேலம்: போதைப்பொருள் ஒழிப்பில் போலீசார் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என சேலம் மண்டலத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் நிலையங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
