Vaathi: 'வாத்தி' படத்திற்கு எதிராக பரபரப்பு புகார்: திட்டமிட்டபடி வெளியாகுமா.?

கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. தனுஷின் கடைசி மூன்று படங்களும் ஓடிடியில் வெளியான நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ படம் திரையரங்குகளில் வெளியாகி 100 கோடி கிளப்பில் இணைந்தது. இதனையடுத்து தற்போது தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ படம் வெளியாகயிருக்கிறது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணி நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘நானே வருவேன்’ படத்தில் இணைந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியான ‘நானே வருவேன்’ படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதனையடுத்து தமிழ் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். வெங்கி அட்லுரி இயக்கும் இந்தப்படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ‘வாத்தி’ வரும் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு ஆசிரியர்களின் மாண்பை குலைக்கும் விதமாக உள்ளதாக ஆசிரியர்கள் சங்கத்தினர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

Ajith Kumar: அதிரடியாக சென்னை திரும்பிய அஜித்: ‘ஏகே 62’ அறிவிப்பு எப்போது..?

இது தொடர்பாக புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதலமைசர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து மனு அனுப்பியுள்ளனர். அதில், நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அதற்கு ‘வாத்தி’ என்று பெயர் வைத்துள்ளனர். இதே படம் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் வெளியாகிறது. தமிழில் மட்டும் ஆசிரிய சமூகத்தை அவமதிக்கும் வகையில் ‘வாத்தி’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

இதனால் படத்தின் பெயரை மரியாதையான வார்த்தைகளால் ‘வாத்தியார்’ என்றோ, தெலுங்கில் வைத்ததுபோல ‘சார்’ என்றோ தமிழில் படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ‘வாத்தி’ படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனுஷ் படத்திற்கு வந்துள்ள இந்த திடீர் சிக்கல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pradeep Ranganathan: என்னை ஹீரோவாக்க யோசிச்சாங்க: ‘லவ் டுடே’ பிரதீப் வருத்தம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.