துருக்கியின் அதியமான் நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையே 212 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கித் தவித்த 77 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார்.
உடனடியாக மீட்புக் குழுவினர் அந்த மூதாட்டியை ஆம்புலன்ஸுக்கு தூக்கிச் சென்று, அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதே போல, துருக்கியின் கஹ்ராமன்மரஸ் பகுதியில் கிட்டத்தட்ட 9 நாட்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த 42 வயது பெண்ணையும் மீட்புக் குழுவினர் மீட்டனர்.