ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி., தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது
இந்த வழங்கி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அமர்வு விசாரணை செய்கிறது..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர் பட்டியலின் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அதிமுக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தொகுதியில் இல்லாத 30 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை, வாக்காளர்களின் இரட்டைப் பதிவும் உள்ளது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளால் கள்ள ஓட்டு போட வாய்ப்பு உள்ளதாகவும், எனவே நியாயமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி, அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சி.வி.சண்முகம் தொடர்ந்த இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.