பிப்ரவரி 18ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மகா சிவராத்திரி. மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபடுவர். அவ்வாறு இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டால் கடவுளின் ஆசிகளை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த நிலையில் நாடு முழுவதும் மகா சிவராத்திரி பண்டிகை வரும் பிப்ரவரி 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகா சிவராத்திரி பண்டிகையல முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப்ரவரி 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.